1. மாணவர்கள் பள்ளி நடைபெறும் எல்லா நாட்களிலும் தவறாமல் பள்ளிக்கு வரவேண்டும். விடுப்பு தேவைப்படின் பெற்றோர் கையொப்பமிட்ட விடுப்பு விண்ணப்பத்தைப் பள்ளி முதல்வரிடம் சமர்ப்பித்து முன் அனுமதி பெறவேண்டும். பெற்றோரைத் தவிர வேறெந்த உறவினரும் விடுப்பிற்கான அனுமதியைப் பெறமுடியாது.
 2. விடுப்பிற்கான அனுமதியை முன்னரே பெற்றிருந்தாலும் மாணவர்கள் முதல்வரின் கையொப்பத்தைத் தம் கையேட்டில் பெற்ற பின்னரே
  வகுப்பிற்குச் செல்லவேண்டும்.
 3. மாணவர்கள் பள்ளிக்கு அவசியம் சீருடை அணிந்து வரவேண்டும்.குறிப்பாகப் பிறந்தநாளின் போதும் சீருடையில்தான் வரவேண்டும்.
 4. ஒழுக்கம் தவறி நடக்கும் மாணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 5. வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் பள்ளிக்குச் சொந்தமான பொருட்களுக்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும்
  மாணவர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
 6. காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர் ஒவ்வொருவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
 7. மாணவர் ஒவ்வொருவரும் பள்ளியின் கட்டுப்பாட்டையும் நற்பெயரையும் பாதுகாத்தல் வேண்டும்.
 8. மாணவர்கள் அனைத்துத் தேர்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
 9. பெற்றோர்கள் பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் பள்ளியின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதும், தங்கள் பிள்ளைகளின்
  ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் அவர்தம் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். விளையாட்டு விழா மற்றும் பெற்றோர் தினவிழாக்களில் அவசியமாகக் கலந்துகொள்ள வேண்டும்.
 10. பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெறும் நாட்களில் பெற்றோர்கள் நேரில் வந்து மாணவரின் தேர்ச்சி அட்டையைப் பெற்றுக் கொள்ள
  வேண்டும். கல்வியில் பின்தங்கிய நிலை ஏற்படின் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாகக் கட்டாயம் முதல்வரையோ, குறிப்பிட்ட பாட ஆசிரியரையோ அவசியம் சந்திக்க வேண்டும்.
 11. பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் தேர்ச்சி விகிதத்தைக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே தேர்ச்சி அட்டையின் வாயிலாகக் கவனித்தல்
  வேண்டும். சரிவர கவனிக்கப்படாத பிள்ளைகளின் தேர்ச்சி நிலை ஆண்டின் இறுதியில் பாதிக்கப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர்களின் கல்வி வளர்ச்சியினை அவ்வப்போது கவனித்தல் மிகவும் அவசியமாகும்.
 12. வாரத்தேர்வு, பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு ஆகிய அனைத்துத் தேர்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைக் கொண்டுதான் மாணவர்களின் ஆண்டுத் தேர்ச்சியானது உறுதி செய்யப்படும். முழு ஆண்டுத் தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி அடைந்து விட முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
 13. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமாயின் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவிகித மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
 14. ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் தமக்குரிய கல்விக் கட்டணத்தைத் தாமதமின்றிச்
  செலுத்த வேண்டும்.
 15. மாணவர்கள் ஒவ்வொரு பருவ இறுதியிலும் அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் முழுமையாகச் செலுத்தவேண்டும். தவணைமுறைக்
  கட்டணத்தை ஏற்க இயலாது.
 16. ஒவ்வொரு தேர்வின்போதும் தேர்வு விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். விதிமுறைகளுக்கு மாறான செயல்களில்
  ஈடுபடும் மாணவர்கள் முன்னறிவிப்பின்றி பள்ளியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர்.
 17. எந்தவொரு மாணவரும் பள்ளி வளாகத்திற்குள் ஒழுங்கீனமான புத்தகங்கள், குறுந்தகடுகள், கைபேசிகள், படக்கருவிகள் போன்றவற்றைக்
  கொண்டு வருவதும் பயன்படுத்துவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.அவ்வாறான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை
  எடுக்கப்படும்.
 18. பள்ளி வேலை நேரத்தின் போது பெற்றோர் தம் மகனை அவசியமாக சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் முதல்வரிடம் அல்லது உதவித் தலைமை ஆசிரியர்களிடம் மட்டுமே அணுகவேண்டும்.
 19. மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், நலன், பள்ளியின் நிகழ்வுகள் அனைத்தும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக பெற்றோர்களுக்கு
  அவ்வப்போது தெரிவிக்கப்படும். குறுஞ்செய்திகளை (SMS) உடனுக்குடன் தெரிந்து கொண்டு தத்தம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக
  முழுமையான ஒத்துழைப்பைத் தருமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.